புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2018

இராணுவ மயப்படுத்தப்படும் முன்னாள் போராளிகள் - 50 பேர் இராணுவத்தில் இணைப்பு


புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 50 பேரை இராணுவத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புனர்வாழ்வளிப்பு ஆணையாளரின் பணிப்புரைக்கமைய, யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியின் மேற்பார்வையில், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடந்த வியாழக்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்
இந்த முன்னாள் போராளிகளுக்கு மாதாந்தம் 40,000 ரூபாய் சம்பளமும் மருத்துவ வசதிகளும், 55 வயதின் பின்பு ஓய்வூதியமும் வழங்கப்படவுள்ளதோடு, இவர்கள் யாழ்.பலாலியிலுள்ள இராணுவப் பண்ணைகளில் தென்னை மரங்களை பராமரிப்பதற்கான சேவையிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புதிதாக நியமனம் பெற்ற இளைஞர் மற்றும் யுவதிகள் ஒரு நாளிற்கு 8 மணித்தியாலயம் சேவையில் ஈடுபட வேண்டும் எனும் நிபந்தனைகளுக்கமைய இவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

ad

ad