17 பிப்., 2018

சுய­ந­லத்துக்­காக ஒற்­றுமை என வேடமிட்டுள்ளோருடன் இணையமாட்டோம்! - கஜேந்திரன்

தமிழ் மக்­க­ளின் அடிப்­படை அபி­லா­சை­களைக் கைவிட்டு தமது சுய­ந­லத்துக்­காக ஒற்­றுமை என வேட­மிட்­டுள்­ளோ­ரு­டன்
நாம் இணை­யப் போவ­தில்லை. பத­வி­க­ளுக்­கான கூட்­டையோ தேர்­தல்­க­ளுக்­கான கூட்­டையோ நாம் விரும்­ப­வில்லை. ஆனால், தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக கூட்டை, எம் மக்­க­ளின் தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்­கான கூட்­டினை எமது கொள்­கை­யின் அடிப்­ப­டை­யில் உரு­வாக்­கு­வ­தற்கு தயா­ரா­கவே உள்­ளோம். இவ்­வாறு தமிழ் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் பொதுச் செய­லா­ளர் செல்­வ­ராசா கஜேந்­தி­ரன் தெரி­வித்­தார்.
தமிழ் மக்­க­ளின் அடிப்­படை அபி­லா­சை­களைக் கைவிட்டு தமது சுய­ந­லத்துக்­காக ஒற்­றுமை என வேட­மிட்­டுள்­ளோ­ரு­டன் நாம் இணை­யப் போவ­தில்லை. பத­வி­க­ளுக்­கான கூட்­டையோ தேர்­தல்­க­ளுக்­கான கூட்­டையோ நாம் விரும்­ப­வில்லை. ஆனால், தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக கூட்டை, எம் மக்­க­ளின் தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்­கான கூட்­டினை எமது கொள்­கை­யின் அடிப்­ப­டை­யில் உரு­வாக்­கு­வ­தற்கு தயா­ரா­கவே உள்­ளோம். இவ்­வாறு தமிழ் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் பொதுச் செய­லா­ளர் செல்­வ­ராசா கஜேந்­தி­ரன் தெரி­வித்­தார்.

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லின் தமிழ்த் தேசிய பேர­வை­யாக பரி­ண­மித்த தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யி­ன­ருக்கு வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு நன்றி தெரி­வித்து அவ­ரால் அனுப்­பி­வைக்­கப்­பட்ட செய்­திக்­கு­றிப்­பி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதில் மேலும் “தாயக மக்­க­ளுக்கு எமக்கு எதி­ரான பொய்ப் பிரச்­சா­ரங்­க­ளை­யும், இருட்­ட­டிப்­பு­க­ளை­யும் தாண்டி எம் மீது நம்­பிக்கை வைத்து வாக்­க­ளித்த எம் அன்­பிற்­கு­ரிய மக்­க­ளுக்கு எமது இத­யம் கனிந்த நன்­றி­கள். உங்­கள் நம்­பிக்­கைக்கு அமைய நாம் உங்­க­ளுக்­காய் தொடர்ந்­தும் பணி­யாற்­று­வோம்.

நாம் பெற்­றி­ருக்­கும் வெற்­றி­யென்­பது தனித்து ஒரு கட்­சி­யின் வெற்­றி­யல்ல. மாறாக, தமி­ழர்­க­ளின் நலனை முதன்­மைப்­ப­டுத்­திய கொள்­கைக்­காக எமது மக்­கள் வழங்­கிய அங்­கீ­கா­ர­மும் வெற்­றி­யு­மா­கும். இது ஒரு ஆரம்­பம் மட்­டுமே.

நீண்ட கடி­ன­மான பணி­க­ளும் சவால்­க­ளும் எமக்­குக் காத்­தி­ருக்­கி­றது. இந்­தத் தேர்­த­லில் எமக்கு வாக்­க­ளிக்­காத எமது மக்­கள்­கூட, இனி­வ­ரும் காலத்­தில் எமது கொள்­கையை பலப்­ப­டுத்­து­வ­தற்கு அங்­கீ­கா­ர­மும் ஆத­ர­வும் தரு­வார்­கள் என்ற நம்­பிக்கை எமக்­குண்டு. இதற்கு இன்று அடைந்­துள்ள வெற்றி ஒரு சாட்சி. ஏனை­யோர் சொல்­வதை செய்­வ­தற்­கும், தரு­வ­தைப் பெறு­வ­தற்­கும் நாம் ஒன்­றும் அடி­மைப்­பட்ட இன­மல்ல.

எமது பேரம் பேசும் பலத்தை சர­ண­கதி அர­சி­ய­லூ­ட­கவோ, இணக்க அர­சி­ய­லு­டா­கவோ அதி­க­ரிக்க முடி­யாது. ஆகவே, எமது தேச­ந­லனை முதன்­மைப்­ப­டுத்­திய உறு­தி­யான கொள்­கையை எடுத்­துள்ள நாம், அதனை அமுல்­ப­டுத்­து­வ­தற்­கான நிகழ்ச்சி நிரலை வகுத்து, செயற்றிட்­டங்­களை முன்­னெ­டுக்க இருக்­கி­றோம்.இது தொடர்­பான சிறப்­புக் கலந்­து­ரை­யா­டல்­களை எதிர்­கா­லத்­தில் உங்­க­ளோடு மேற்­கொள்ள இருக்­கி­றோம். தமிழ் மக்­க­ளின் நலனை முன்­னி­றுத்திச் செயற்­ப­டு­வ­தற்­காக, தமிழ்த் தேசி­யக் கொள்­கைப் பற்­று­டைய அனைத்து சக்­க­தி­க­ளை­யும் கட்சி பேதங்­கள் அமைப்­புப் பேதங்­க­ளைக் கடந்து எம்­மு­டன் இணைந்து செயற்­பட முன்­வ­ரு­மாறு நாம் கேட்­டுக்­கொள்­கி­றோம்.

நாம் எமது தேசத்­தின் அங்­கீ­கா­ரத்தைப் பெற்­றுக் கொள்­வ­தற்­கான பய­ணப் பாதை­யில் நெருப்­பா­று­க­ளை­யும் நீந்­திக் கடக்­க­ வேண்­டி­யுள்­ள­தால், உங்­க­ளது ஆத­ரவை மென்­மே­லும் வழங்க வேண்­டு­மென்று அன்­பு­ரி­மை­யோடு கேட்­டுக்­கொள்­கி­றோம் என்­றுள்­ளது