17 பிப்., 2018

நெடுங்கேணியில் ரி 56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது

வவுனியா - நெடுங்கேணியில் நேற்றிரவு ரி 56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 7 மணியளவில் போக்குவரத்துப் பொலிஸார், மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரிடம் அவரது பையினை சோதனை மேற்கொண்டபோது ரி 56 ரக துப்பாக்கியும் 611 ரவைகளையும் கைப்பற்றினர்.
குளவிசுட்டான் பகுதியைச் சேர்ந்த 45 வயதான சிவசம்பு ஜெயரதன் என்பவரை சோதனையிட்ட போதே துப்பாக்கியும் துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வவுனியா - நெடுங்கேணியில் நேற்றிரவு ரி 56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு 7 மணியளவில் போக்குவரத்துப் பொலிஸார், மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரிடம் அவரது பையினை சோதனை மேற்கொண்டபோது ரி 56 ரக துப்பாக்கியும் 611 ரவைகளையும் கைப்பற்றினர். குளவிசுட்டான் பகுதியைச் சேர்ந்த 45 வயதான சிவசம்பு ஜெயரதன் என்பவரை சோதனையிட்ட போதே துப்பாக்கியும் துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த நபரை பொலிஸார் கைது செய்ததோடு அவரது வீட்டினையும் சோதனை செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் நெடுங்கேணிப் பொலிஸாரினால் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.