கிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வீரம் விளைந்த மண்ணில் நின்று இக்க
லைஞர்களைப் பாராட்டுவது எமக்கு மேலும் பெருமையைத் தேடித்தருகின்றதெனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இலங்கையில் இந்த மண்ணிலேயே வீரத் தமிழன், வீரத் தமிழச்சி வாழ்ந்ததாகவும், வாழ்வதாகவும் அவர் உணர்ச்சிபூர்வமாக கருத்துத் தெரிவித்திருந்தார்.கிளிநொச்சி புகைப்படப்பிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் புகைப்படப்பிடிப்பாளர்களைக் கௌரவிக்கம் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கிளிநொச்சி பாரதிஸ்டார் விடுதியில் இடம்பெற்ற இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்து கொண்டார்.
இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் புகைப்படத்துறையில் ஆர்வமாகச் செயற்பட்ட மூத்த புகைப்பட கலைஞர்கள் கௌரவிக்கப்பட்ட இந்நிகழ்வில் இயக்குனர்களான பாரதிராஜா மற்றும் இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் உள்ளிட்ட குழுவினர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதனிடையே இன்று யாழில் ஊடகவியலாளர்களை சந்திப்பதுடன் அங்கும் நிகழ்வொன்றில் அவர்கள் பங்கெடுக்கவுள்ளனர்.