தற்போது பெரும்பாலான ஊடகங்களில் சின்மயி வைரமுத்து பற்றி கூறிய குற்றச்சாட்டு தான் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து திரையுலகில் இருக்கும் திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் சின்மயியின் நடவடிக்கைகளை வரவேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் பெண்களுக்கு எதிராக எதுவாக இருந்தாலும் தட்டி கேட்க வேண்டும். பெண் என்பவள் ஒரு தாய்க்கு சமம். சின்மயி தைரியமாக வெளிப்படையாக கூறியுள்ளார். அது வரவேற்க வேண்டிய விஷயம்.தான்.
வெளியுலகத்திற்கு கொண்டு வர வேண்டியது அவர்கள் கடமை கொண்டு வந்து விட்டார்கள். இதன் மூலம் இது போன்ற செயல்களில் ஈடுபடும் பலருக்கும் அச்ச உணர்வு ஏற்படும். இது கலையுலகில் மட்டுமல்ல எல்லா பொது நிறுவனங்களிலும் பெண்களை மதிக்க தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்