கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான
செல்வம் அடைக்கலநாதன் கருத்து தெரிவிக்கையில்,
புதிய அரசியலமைப்பின் ஊடாகத் தமிழர்களின் அபிலாஷைகளுக்கான ஓர் அரசியல் தீர்வு இந்த நல்லாட்சி அரசின் காலத்தில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கை இன்னமும் இருப்பதாகவும் அந்த நம்பிக்கையின் காரணத்தாலேயே வெளியில் இருந்துகொண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குகிறது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து கூறுகையில் தமிழ்மக்களுக்கான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஒத்துழைத்தார்கள். அதுபோல், சில விடயங்களைத் தாம் நிறைவேற்றியிருப்பதாகவும் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை என்று இழக்கப்படுகிறதோ அன்றைய தினம் தமது ஆதரவை விலக்கிக்கொள்ளத் தயங்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவத்தார்