இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், கட்சியின் யாப்பினை மீறி செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கட்சியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த நிலையில், ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும், தமது கொள்கையுடன் இணங்கிச் செல்கின்ற பலர் தம்முடன் இணையவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனும், அடுத்தமுறை மாகாண சபைத் தேர்தலில் புதிய கட்சி ஒன்றில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது