23 மார்., 2019

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் வனவள பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாளர் எங்கே?

தமிழீழ விடுதலை புலிகள் காடுகளை பாதுகாத்தனர் என கூறும் மைத்திரியே இவர்கள் எங்கே..?எழுந்து நிற்கும் கேள்வி.

இலங்கையில் 28 சதவீதமான காடுகளே தற்போது உள்ளது. அவற்றை பாதுகாத்தவர்கள் தமிழீழ விடுதலை புலிகள் என கூறும் மைத்திரியே, தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் வனவள பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாளர் சக்தி மற்றும் அவருடைய குடும்பம் எங்கே? என உறவினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்

அண்மையில் நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய மைத்திரிபால சிறிசேனா இலங்கையில் 28 சதவீதமான காடுகளே தற்போது உள்ளதாகவும், அதனை பாதுகாத்தவர்கள் தமிழீழ விடுதலை புலிகள் என கூறியிருக்கிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக கேள்வி ஒன்று எழுப்பபட்டுள்ளது.

அது தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் வனவள பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாளர் சக்தி மற்றும் அவரு டைய குடும்பத்தாருடைய உறவினர்கள் அல்லது நண்பர்களால் எழுப்படுகின்றது.

அதில் வனவள பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாளர் சக்தி மற்றும் அவருடைய குடும்பத்தினர் இறுதிப் போரில் சரணடைந்தனர்.

அவர்களுடைய தகவல் எதுவும் தெரியாத நிலையில் அவர்களும் காணாமல்போனவர்கள் பட்டியலில் உள்ளனர்.

இந்நிலையில் வனவளத்தை பாதுகாத்தார்கள் என பெருமைப்படும் இனபடுகொலை ஜனாதிபதியே இவர்கள் எங்கே என அந்த கேள்வி எழுந்து நிற்கின்றது.