புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மார்., 2019

பிரெக்சிட் தாமதம்! இரு சந்தர்ப்பங்களை வழங்க முன்வந்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்

பிரித்தானியாவின் பிரெக்சிட் வெளியேற்றம் இம்மாதம் 29 ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில் வெளியேற்றத்தைப் பிற்போடுவதற்கு பிரித்தானியப் பிரதமருக்கு இரு சந்தர்ப்பங்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் இணங்கியுள்ளது.

முதலாவது தெரிவு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்துப் பரிசீலிப்பதற்கு மே மாதம் 22 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவது.

இல்லையேல் பிரித்தானியாவுக்கு அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை கால அவகாசம் கொடுப்பது.

இரண்டாவது தெரிவு மே மாதம் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களில் பங்குபெறுவதற்கான தமது எண்ணம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்பது.

இவ்விரு சந்தர்ப்பங்களையும் பிரித்தானியப் பிரதமர் மே ஏற்றுக்கொண்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ad

ad