புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2019

ஐதராபாத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா அணி

ஐபிஎல் தொடங்கி இரண்டாம் நாளில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் அணியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றுள்ளது.

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னரும், ஜானி பேரிஸ்டோவும் 100 ரன்களை எடுத்தனர்.

டேவிட் வார்னர் 53 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தமிழக வீரர் விஜய சங்கர் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

20 ஓவர் முடிவில் சன் ரைசர்ஸ் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை எடுத்தது.

182 ரன்களை இலக்காக கொண்டு நைட் ரைடர்ஸின் தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் லின், நிதிஷ் ரானா ஆகியோர் களமிறங்கினர்.

ஏழு ரன்களில் அவுட் ஆனார் கிறிஸ் லின். அவரை தொடர்ந்து ராபின் உத்தப்பா களமிறங்கி 35 ரன்களை குவித்தார்.

19.4 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து நைட் ரைடர்ஸ் அணி வெற்றிப் பெற்றது.

ஐபிஎல்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 8.4 கோடிக்கு ஏலம்
ஐ.பி.எல் தொடர்களில் 5000 ரன்கள்: ரெய்னாவின் சாதனை, தவறவிட்ட கோலி
இந்த போட்டி போதிய வெளிச்சம் இல்லாமையால் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

நேற்று சென்னை சேப்பாக்கம் மைத்தானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சென்னை அணி வீழ்த்தியது.

முதல் போட்டி பெரும் பரப்பரப்பாக நடைபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் சென்னை அணிக்கு பெங்களூர் அணி 71 ரன்களை இலக்காக வைத்தது.

அதை சென்னை அணி 17ஆவது ஓவரில்தான் இலக்கை அடைந்து சற்று இழுபறியாக வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்றைய தினத்தின் இரண்டாம் போட்டி மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

ad

ad