இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, விக்கும் களுவாரச்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த விடயம் தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
2015ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன ஒப்பந்தமொன்றில் இரகசியமாக கையெழுத்திட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க போலி ஆவனம் ஒன்றை வெளியிட்டதாக வழக்கு தாக்கல் செய்யப்படிருந்தது.
இதனையடுத்து குறித்த ஆவனத்தை இரசாயன பகுப்பாய்வு செய்தபோது, அந்த ஆவணம் போலியானதென தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார். அதன்பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது