புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

8 மே, 2019

சஹ்ரானின் உதவியாளரை விடுவிக்க கையூட்டு கொடுக்க வந்த இளைஞன் கைது

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவராக கருதப்படும் சஹ்ரான் ஹசீமின் உதவியாளர் அப்துல் மொஹமட் நியாஸ் என்பவரை விடுவிப்பதற்காக கையூட்டு கொடுக்க முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டவர் முக்கரவெவ பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞர் எனத் தெரிவிக்க்பபட்டுள்ளது.

தற்போது தடுப்பில் உள்ள அப்துல் மொஹமட் நியாசுக்கு நீதி மன்றில் பிணை கேட்கும் போது அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருப்பதற்கே ஹொரவபொத்தானை காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு 5 லட்சம் ரூபாயை கையூட்டாக வழங்க முற்பட்டவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் இரண்டு இலட்சத்து ஐப்பது ஆயிரம் ரூபாயை முற்பணமாக தருவதாகவும், அப்துல் மொஹமட் நியாசுக்கு பிணை கிடைத்து வெளியே வந்ததும் மிகுதிப் பணத்தை தருவதாகவும் பேரம் பேசப்பட்டது.

இந்நிலையிலேயே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.