புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

8 மே, 2019

கசப்புக்கள் கடந்து கனிந்து காலம், மீண்டும் ஒன்றுசேருகிறார்கள்

 மனக்கசப்பு , கருத்து மோதல் தாண்டி மீண்டும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்து பாடவருகிறார்
எஸ்.பி. பாலசுப்பிரமணியம். இது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது

தமிழ் திரையிசை பிரபலன்களான இசைஞானி இளையராஜா மற்றும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இடையே 2017-ம் ஆண்டு காப்புரிமைப் பிரச்னை தொடர்பாக கருத்து கருத்துமோதல் ஏற்ப்பட்டது.
அண்மையில் நடைபெற்ற இளையராய 75 நிகழ்ச்சிக்கும் பாலசுப்ரமணியம் வரவில்லை.

எனினும் அண்மையில் நேர்காணல் ஒன்றின்போது ஓர் இசையமைப்பாளராக எப்போதும் அவர் காலைத் தொட்டுக் கும்பிடுவதற்குத் தயங்கமாட்டேன் என்று கூறியுள்ளது பலருக்கு பாலசுப்ரமணியம் இன்றும் இளையராஜாமீது மரியாதையும் பற்றும் இருப்பதை உணர்ந்துகொண்டனர்.

இந்நிலையில் எதிர்வரும் வரும் ஜூன் 2 அன்று தன்னுடைய பிறந்தநாளையொட்டி, இசை நிகழ்ச்சி ஒன்றை சென்னையில் நடத்தவுள்ளார் இசைஞானி இளையராஜா. இந்த இசை நிகழ்ச்சியில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கே.ஜே. யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதூப், மனோ ஆகிய பாடகர்கள் பாடவுள்ளார்கள் என்றும் சென்னை - செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இசை நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பைத் தாண்டி
இளையராஜா,பாலசுப்ரமணியம், கூடவே ஜேசுதாசும் இணைவைத்தனன் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்