புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

8 மே, 2019

இராணுவத்தினரால் 113 அவசர தொலைபேசி இலக்கம் அறிவிப்பு


அவசர சந்தர்ப்பம் அல்லது சந்தேகத்திற்கிடமான விடயங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கென விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், 113 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு மேற்படி விடயங்களை அறிவிக்குமாறு இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களைத் தொடர்ந்து பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனிடையே, மேலும் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இது தொடர்பான தகவல்களுக்காகவும், அவசர தொடர்புகளுக்காகவும் பொதுமக்களுக்கு இந்த அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.