27 மே, 2019

கிளிநொச்சியில் ரயிலில் மோதி ஒருவர் பலி

கிளிநொச்சி, இரணைமடுச் சந்தியில் இன்றிரவு (26) இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

இரணைமடுப் பகுதியைச் சேர்ந்த இராசேந்திரம் எனும் 62 வயதான நபரே உயிரிழந்தவராவர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரவு நேர தபால் ரயிலில் மோதுண்டே குறித்த நபர் மரணித்துள்ளார்.

இவ்விபத்தால் ரயில் பயணம் தாமதமடைந்ததுடன் சடலத்தை மீட்ட ரயில்வே அதிகாரிகள் சடலத்தை அடுத்த ரயில் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டுச் சென்றனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைக