புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2019

வன்முறைகளை தடுக்க படைகள் தவறியுள்ளன...!

வடமேல் மாகாணம், மினுவாங்கொடை பகுதியிலும் வன்முறையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில், அவை இடம்பெற சில மணி நேரத்துக்கு முன்பாகவே காவல் துறைக்கும் இராணுவத்தினருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தும் அவற்றை தடுக்க எந்த நடவடிக்கைகளும் அவர்களால் எடுக்கப்படவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.

இந் நிலையில் அந்த வன்முறைகள் தொடர்பில் அவற்றை சீர் செய்ய இன்று வரை உறுதியான எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடுகம பதில் காவல் துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

வன்முறைகள் நடந்த இடங்களுக்கு தாம் நேரில் சென்று தகவல் திரட்டியதாகவும், இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலதிகமாக அந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள், கிராமத் தலைவர்கள், காவல் துறை மற்றும் இராணுவ வீரர்கள் என பலரிடம் தாம் கருத்து பதிவு செய்ததாகவும் அதிலிருந்தே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கலாநிதி தீபிகா உடுகம தனது கடிதத்தில் பதில் காவல் துறை மா அதிபருக்கு சுட்டிக்கடடியுள்ளார்.

23.05.2018 என்ற திகதியிடப்ப்ட்ட குறித்த கடிதத்தில், வடமேல் மாகாணத்தில் பதிவான வன்முறைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் வன்முறையாளர்களுக்கு எதிராக 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 ஆம் அத்தியாயத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்

ad

ad