புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 ஜூன், 2019

பழமைவாதக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு 10 பேர் போட்டி!

பிரித்தானியாவில் பழமைவாதக் கட்சியின் (கன்சர்வேடிவ்) தலைமைத்துவப் போட்டிக்கு 10 பேர் போட்டியிடுகின்றனர்.

சுற்றுச்சூழல் செயலர் மைக்கேல் கோவே
சுகாதாரத்துறை செயலாளர் மேட் ஹான்காக்
முன்னாள் தலைமை கொறடா மார்க் ஹார்ப்பர்
வெளியுறவுத் துறைச் செயலர் ஜெரமி ஹன்ட்
உள்துறை செயலாளர் சஜீத் ஜாவிட்
முன்னாள் வெளியுறவுச் செயலாளர் போரிஸ் ஜான்சன்
அவையின் முன்னாள் தலைவர் ஆண்ட்ரியா லீசோம்
முன்னாள் பணி மற்றும் ஓய்வூதிய செயலாளர் எஸ்தர் மெக்கவேய்
முன்னாள் பிரெக்சித் செயலாளர் டொமினிக் ராப்
சர்வதேச அபிவிருத்தி செயலாளர் ரரி ஸ்டீவர்ட்

ஆகியோரே போட்டியிடுகின்ற வேட்பாளர்கள்.

ஜெரமி ஹன்ட், டொமினிக் ராப், மேட் ஹாங்க் மற்றும் மைக்கேல் கோவே ஆகியோர் வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாகவே தங்களது பிரச்சாரத்தைத் முன்னெடுத்துள்ளனர்.

பிரெக்ஸித் மீதான மற்றொரு வாக்கெடுப்பிற்கு ஆதரவு கொடுத்த ஒரே போட்டியாளர் சாம் கைமா, ஆதரவு காட்டுவதற்கு போதுமான நேரம் இல்லை என்று கூறி போட்டியிலிருந்த விலகியுள்ளார்.