புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 ஜூன், 2019

அமைச்சரவை நாளை கூடாது - இரத்துச் செய்தார் மைத்திரி

அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறாதென அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.அண்மைய தாக்குதல் சம்பவங்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவினை இரத்துச் செய்யுமாறும் அது இரத்துச் செய்யப்படும்வரை அமைச்சரவை கூட்டப்படமாட்டாதென்றும் இறுதியாக நடந்த விசேட அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஜனாதிபதியின் பணிப்பை புறந்தள்ளி நாளை பாராளுமன்ற தெரிவுக்குழு ஏற்கனவே திட்டமிட்டபடி கூடவுள்ளது.

இந்த சூழ்நிலையில் நாளைய அமைச்சரவை கூட்டத்தை ஜனாதிபதி ரத்துச் செய்துள்ளதால் அரசியல் நெருக்கடி தொடரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.