புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 ஜூன், 2019

சிறீலங்கா ஜனாதிபதிக்கு எதிரா வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்து இதுவரையும் தமது பிள்ளைகளை மீட்டு தரவில்லை என தெரிவித்து, தாயகத்தில் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.வவுனியா சகாயமாதபுர மாதா கோவிலில் தமது பிள்ளைகளை வேண்டி காணாமல் போன உறவினர்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து பேரணியாக கந்தசுவாமி கோவில் வீதியூடாக மணிக்கூட்டு வீதியூடாக 843வது நாளாக காணாமல் போன உறவினர்களால் சுழற்சிமுறை உண்ணாவிரதத்தில் இடம்பெறும் கொட்டகையை சென்றடைந்ததுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அமெரிக்க- ஐரோப்பிய கொடிகளை தாங்கியிருந்ததுடன்,சிறிசேனவே நீங்கள் ஜனாதிபதி பதவியை விட்டு விடுவதற்கு முன் எங்கள் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை காட்டுங்கள்,ஜனாதிபதியே நாங்கள் உங்களை வரவேற்கவில்லை.

நீங்கள் உங்கள் இடத்திற்கு திரும்பி செல்லுங்கள்,போன்ற பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.