புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2019

முற்றுகின்றது முஸ்லீம் வைத்தியர் விவகாரம்?

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் மொஹமட் சாபிக்கு எதிராகக் கிடைக்கப்பெற்றுள்ள முறைபாடுகளுக்கமைய, விசாரணைகள் உரிய முறையில் இடம்பெறவில்லை என, குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதியால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென, கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.


அவ்வாறு நிபுணர் குழு நியமிக்கப்படாவிட்டால், இந்த வாரத்துக்குள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த வைத்தியருக்கு எதிராக, நேற்றைய தினம் எம்பிலிப்பிட்டிய, களுத்துறை நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
.
இதேவேளை குறித்த வைத்தியருக்கு எதிராக இதுவரை 723 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.


சிசேரியன் செய்ததன் மூலம் மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக வாய்ப்பை தாம் இழந்துள்ளதாகத் தெரிவித்து, வைத்தியர் சாபிக்கு எதிராக, தாய்மார் வைத்தியசாலையில் முறைப்பாடுகளை செய்து வருகின்றனர்.

கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல், குறித்த முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுவரும் நிலையில், தினமும் வைத்தியசாலைக்கு தாய்மார் வருகைதந்து முறைப்பாடு செய்து வருகின்றனரென, வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதேவேளை, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரும், வைத்தியர் சாபிக்கு எதிராக முறைப்பாடுகளை பொறுப்பேற்று வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

ad

ad