11 ஜூன், 2019

லண்டனில் புதிதாகக் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள 6 மாடி கட்டிடத்தில் தீடிரென பிடித்த தீயை அணைக்க, 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீர்ர்கள் குவிந்தனர். ஆனால் அதற்குள் முழு கட்டடமும் தீயினால் கடுமையாக பாதிக்கப்பட்டது. தீ மளமளவென பரவியதை அடுத்து, குடியிருப்புவாசிகள் செய்தவதறியாது தவித்தனர்.இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழப்பு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.