புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

18 ஜூன், 2019

மண்கும்பான் பகுதியில் கற்றாளைகளை பிடுங்கிய 2 முஸ்லீம் நபர்கள் கைது! யாழ்ப்பாணம் தீவகம் மண்கும்பான் பகுதியில் கற்றாளைகளை பிடுங்கிக் கொண்டிருந்தர்களை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். யாழ்.தீவக பகுதிகளில் இருந்து பெருமளவு கற்றாளை திருடப்படும் நிலையில் கற்றாளை பிடுங்குவது அந்த பகுதிகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தடையை மீறி பெருமளவு கற்றாளைகளை பிடுங்கிக் கொண்டு வெளியேற முயற்சித்த இரு இளைஞா்களை மண்டைதீவு காவல் துறை காவலரண் பொறுப்பதிகாாி விவேகானந்தராஜ் தலமையிலான காவல் துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் ஊா்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

யாழ்ப்பாணம் தீவகம் மண்கும்பான் பகுதியில் கற்றாளைகளை பிடுங்கிக் கொண்டிருந்தர்களை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.யாழ்.தீவக பகுதிகளில் இருந்து பெருமளவு கற்றாளை திருடப்படும் நிலையில் கற்றாளை பிடுங்குவது அந்த பகுதிகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடையை மீறி பெருமளவு கற்றாளைகளை பிடுங்கிக் கொண்டு வெளியேற முயற்சித்த இரு இளைஞா்களை மண்டைதீவு காவல் துறை காவலரண் பொறுப்பதிகாாி விவேகானந்தராஜ் தலமையிலான காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் ஊா்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்