புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

18 ஜூன், 2019

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி.நிர்வாக குழு உறுப்பினர் கருணாகரன் குணாளன்,தீவகத்தில் தீவக ஐக்கிய விளையாட்டு கழக பட்மின்டன் ( Badminton ) அணிக்குரூபாய் இருபதினாயிரம் பெறுமதிமிக்க விளையாட்டு உபகரணங்களை வழங்கி உள்ளார் விளையாட்டினை ஊக்குவிக்கும் நோக்குடன்
சமூக ஆர்வலர்களால் தீவக ஐக்கிய விளையாட்டு கழகம் ( islands united sports club ) ஊடாக தீவக பட்மின்டன் கழகம் உருவாக்கப்படுகின்றது . அதனை முன்னிட்டு எனது அன்பளிப்பாக ரூபாய் இருபதினாயிரம் பெறுமதிமிக்க விளையாட்டு உபகரணங்களை வழங்குவதில் மனமகிழ்ச்சி அடைகின்றேன் .
தீவுப்பகுதியில் பெண்கள் கழக மட்ட விளையாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்வதென்பது அரிதாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் கூடுதலாக பெண்களை உள்ளீர்க்கும் வகையிலேயே தீவக பட்மின்டன் கழகம் உருவாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது - கருணாகரன் குணாளன் : நிர்வாக குழு உறுப்பினர் , வாலிப முன்னணி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி .