புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

18 ஜூன், 2019

கொக்குவிலில் பெற்றோல் குண்டு வீசி வாள்வெட்டுக்குழு அட்டகாசம்!

யாழ்ப்பாணம், கொக்குவில், மஞ்சவனப்பதி பகுதியில் நேற்று மாலை மாலை 6.30 மணியளவில் வீடு ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்குள்ளவர்களை அச்சுறுத்தியதுடன், பெற்றோல் குண்டை வீசி, அங்கிருந்த பெறுமதி வாய்ந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்றே இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் வீட்டிலிருந்த தொலைக்காட்சி உள்ளிட்ட பெறுமதியான தளபாடங்கள் மற்றும் பல பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, மானிப்பாய் செல்லமுத்து மைதானம் ஊடாக நேற்று மாலை 2 மோட்டார் சைக்கிள்களில் 04 பேர் வாள்களுடன் பயணிப்பதை அவதானித்த பொதுமக்கள் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.