புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

18 ஜூன், 2019

சொப்பிங் பையுடன் வந்தவர்கள் கோடீஸ்வரர்களாகி விட்டனர்! -செல்வம் அடைக்கலநாதன்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தீர்க்கதரிசனமான செயற்பாட்டினால், கடந்த காலத்தில் வடக்கில் இருந்து சொப்பிங் பைகளுடன் வந்தவர்கள் கோடீஸ்வரர்களாகி விட்டனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை முஸ்லிம் பயங்கரவாதிகளுடன் ஒப்பிடமுடியாது என்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் கருத்தை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அவரின் கருத்தானது தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சரியானதே என்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. விடுதலைப்புலிகள் இலட்சியத்துடன் இலக்குகளை தேர்ந்தெடுத்து போராட்டத்தை ஆயுத ரீதியாக கொண்டு சென்றவர்கள். அவர்கள் எடுத்த முடிவு தீர்க்கதரிசனமாக அமைந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்