புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

18 ஜூன், 2019

சிக்கினார் ஆமி மொஹிதீன்! - சஹ்ரானுக்கு பயிற்சி அளித்தவர்

தற்கொலைக் குண்டுதாரி சஹ்ரான் சாசிம் தலைமையிலான குழுவினருக்கு பயிற்சி வழங்கிய ஆமி மொஹிதீன் என்ற இராணுவ சிப்பாய் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா மற்றும் சில இடங்களில் சஹ்ரான் கும்பலுக்கு குண்டு வெடிப்பு பயிற்சி வழங்குவதற்கு இவரே நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தேசிய தவ்ஹித்
ஜமாத் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் சிலர் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆமி மொஹிதீன் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் காணாமல் போயிருந்ததாக கூறப்படுகின்றது. அவர் குண்டு தொடர்பில் தேர்ச்சி பெற்ற ஒருவராவார்.