25 ஜூன், 2019

ளிநொச்சியில் தொடருந்து மோதி 6 சிறிலங்கா படையினர் பலி

கிளிநொச்சியில் இன்று பிற்பகல் சிறிலங்கா இராணுவ வாகனம் ஒன்றின் மீது, யாழ்தேவி தொடருந்து மோதியதில், 6 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கிளிநொச்சி- 55 ஆம் கட்டைப் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் இந்த விபத்து இடம்பெற்றது.

இராணுவத்தினருக்கான குடிநீர் மற்றும் விநியோகப் பொருட்களை ஏற்றிச் சென்ற வண்டியே, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்துடன் மோதியது.

இந்தச் சம்பவத்தில் 6 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர் என்றும், 2 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேவேளை, இந்த விபத்தில், 4 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர் என்றும் 3 படையினர் காயமடைந்துள்ளனர் என்றும் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.