25 ஜூன், 2019

ஜனாதிபதி தேர்தலுக்கான வியூகம் – ஈ.பி.டி.பி யை சந்தித்தார் பசில்

ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவைத்து குறித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் (ஈ.பி.டி.பி.) கம்யூனிஸ்ட் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி. இ. டபிள்யூ. குணசேகர மற்றும் பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த சந்திப்பு தொடர்பாக பொதுஜன பெரமுன தெரிவிக்கையில், புதிய கூட்டணியின் கொள்கையை உருவாக்கும்போது இரு அரசியல் கட்சிகளும் முன்வைக்கும் திட்டங்கள் பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் ஒரு பரந்த கூட்டணியை உருவாக்க மேலும் பல அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாகவும் இந்த புதிய கூட்டணியின் முக்கிய குறிக்கோள் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை தோற்கடித்து புதிய அரசாங்கத்தை அமைப்பது என்றும் அறிவித்துள்ளது.

இதேவேளை பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அறிவிப்போம் என அக்கட்சி முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.