புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூன், 2019

ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா? - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று (செவ்வாய்க்கிழமை) லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, போட்டியை நடத்தும் இங்கிலாந்தை சந்திக்கிறது.


ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகளை தோற்கடித்தது. 3-வது லீக் ஆட்டத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது.

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவானதாக உள்ளது. 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருக்கும் ஆஸ்திரேலிய அணி தனது ஆதிக்கத்தை தொடர்வதுடன், இந்த ஆட்டத்தில் வென்று அரைஇறுதியை உறுதி செய்ய தீவிரம் காட்டும்.

இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், வெஸ்ட்இண்டீஸ், ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தியது. 2-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானிடமும், முந்தைய லீக் ஆட்டத்தில் இலங்கையிடமும் தோல்வியை சந்தித்தது. இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 233 ரன் இலக்கை எட்டிப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது அந்த அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் எஞ்சிய 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்டுள்ளது. முந்தைய தோல்வியை மறந்து வெற்றிப் பாதைக்கு திரும்ப இங்கிலாந்து அணி முனைப்பு காட் டும். தசைப்பிடிப்பு காயம் காரணமாக கடந்த 2 ஆட்டங்களில் ஆடாத தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் இந்த ஆட்டத்திலும் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் களத்தில் பரம எதிரிகளான இவ்விரு அணிகளும் மோதும் ஆட்டத்துக்கு எப்பொழுதும் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அதேபோல் இந்த ஆட்டத்தையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னரை இங்கிலாந்து ரசிகர்கள் குறிவைத்து கிண்டல் செய்து வெறுப்பேற்றுவார்கள். அந்த நெருக்கடியையும் அவர்கள் சந்திக்க நேரிடலாம். சமபலம் வாய்ந்த இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. போட்டி நடைபெறும் லண்டனில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், ஸ்டீவன் சுமித், அலெக்ஸ் கேரி, நாதன் கவுல்டர் நிலே, கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.

இங்கிலாந்து: ஜேம்ஸ் வின்ஸ், பேர்ஸ்டோ, ஜோரூட், இயான் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க்வுட்.

ad

ad