புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

13 ஜூன், 2019

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.
இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், 15-வது நாளான இன்று (வியாழக்கிழமை) நாட்டிங்காமில் நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுவதாக இருந்தது.


இந்திய நேரப்படி இந்தப் போட்டி பிற்பகல் 3 மணிக்கு துவங்கும். போட்டி துவங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு டாஸ் போடப்படும். ஆனால், மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், நாட்டிங்காமில் தொடர்ந்து மழைபெய்ததால் போட்டி கைவிடப்பட்டது. மேலும் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.

நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இதுவரை 4 போட்டிகள் மழையின் காரணமாக கைவிடப்பட்டுள்ளது, என்பது குறிப்பிடத்தக்க