புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

13 ஜூன், 2019

சூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா!

$ஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த நபர் நேற்று கோயமுத்தூரில் இந்திய தேசிய புலனாய்வு பிரவினர் மேற்கொண்ட தேடுதலில் கைதாகியுள்ளார்.

தற்கொலையாளி சஹ்ரானும் அவரும் முகநூல் வழி நட்பாகி பின்னர் தற்கொலை தாக்குதல் நடத்துவது வரை மேம்பட்டி உறவை கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

கைதான நபரை இலங்கைக்கு கொண்டுவரும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல் சம்பவங்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழுவின் அமர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இன்றைய அமர்வில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா சமூகமளித்து சாட்சியளிக்கவுள்ளார்.

அதேவேளை முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோன், பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன ஆகியோரும் இன்று தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற தெரிவுக்குழு அமர்வில் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத்சாலி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தி, காத்தான்குடி பள்ளிவாசல் மற்றும் இஸ்லாம் சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி அப்துல் உவைஸ் ஆகியோர் சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.