புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2019

வலி வடக்கு சென்றார் வடக்கு ஆளுநர்?

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அழைப்பின் பேரில் வலி வடக்கு பிரதேசத்திற்கு இன்று (13) முற்பகல் விஜயம் மேற்கொண்ட வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அப்பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுடன் வலி வடக்கில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள தனியார் காணிகள் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்போது வலி வடக்கு காங்கேசன்துறை பகுதியில் கடற்படையினர் வசமுள்ள நகுலேஸ்வரம் புனித பூமிக்கு சொந்தமான 42 ஏக்கர் காணி உட்பட பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளின் விடுவிப்பு தொடர்பிலும் ஆராயப்பட்டது. மேலும் இந்த விஜயத்தின்போது ஆளுநர் பலாலி வடக்கு அரசினர் தமிழ்கலவன் பாடசாலை மற்றும் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி ஆகியவற்றிற்கும் விஜயத்தினை மேற்கொண்டு பாடசாலைகளின் தற்போதைய நிலவரங்கள் குறித்து பாடசாலை அதிபர்களிடம் கேட்டறிந்துகொண்டதுடன் மாணவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடியதாகவும் ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.

ad

ad