புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

13 ஜூன், 2019

மீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்?


யாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

நாவந்துறைப் பகுதியில் உள்ள முஸ்லிம் குடும்பம் வசிக்கும் வீடொன்றில் மாவா உள்ளிட்ட போதைப்பொருள் பாக்கு பாடசாலை மாணவர்களுக்கு விற்கும் நோக்குடன் பொதியிடப்பட்டதாகத் தகவல் கிடைத்தது.


அந்த வீட்டில் வசிப்பவருக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றில் இதே குற்றச்சாட்டுடன் வழக்கும் உள்ளது.யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள முன்னணி பாடசாலை மாணவர்களுக்கு போதை கலந்த பாக்கு விற்பனை செய்யப்படுவதும் அறியக் கிடைத்தது.

அதனால் யாழ்ப்பாணம் மாநகர சபை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு தகவல் வழங்கி அவர்கள் ஊடாக போதை கலந்த பாக்கு சரைகளை மீட்க நடவடிக்கை எடுத்தோம். அந்த வீட்டை நேற்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சோதனைக்குட்படுத்தினர்.

மாவா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த வீட்டை சோதனையிட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் பாக்குப் பொதிகளை மீட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
வீட்டில் இருந்த மூவர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை பணி செய்ய விடாமல் தடுத்தனர்.ஒரு கட்டத்தில் அவர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களைக் “கொலை செய்வோம்” என்று உயிர் அச்சுறுத்தல் விடுத்தனர்.எனினும் அந்த வீட்டிலிருந்து சுமார் 3 லட்சம் ரூபா பெறுமதியான போதை பாக்கு கைப்பற்றப்பட்டன.