புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

19 ஜூன், 2019

கூட்டமைப்பு எம்.பிக்கள் வராததால் முக்கிய கூட்டம் ரத்து!

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாகவும், தமிழ்த் தேசியக் அகூட்டமைப்பின் இந்தியப் பயணம் தொடர்பாகவும் ஆராய்வதற்காக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நேற்று கூடி ஆராய இருந்தது. எனினும், இந்தக் கூட்டம் நடைபெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

“முக்கிய விடயங்கள் பேசப்பட இருந்தபடியால் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களும் நேற்று நாடாளுமன்றம் வந்திருக்க வேண்டும். எனினும், தவிர்க்க முடியாத காரணங்களினால் சில உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு சமுகமளிக்கவில்லை. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் குழுக் கூட்டம் நேற்று நடைபெறவில்லை. இந்தக் கூட்டம் இன்று அல்லது நாளை நடைபெறும்" என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.