புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

19 ஜூன், 2019

சுவிஸ் ஆற்றில் மிதந்த இலங்கைத் தமிழரின் சடலம் Hit News

சுவிட்சர்லாந்தின் அரோ மாநிலத்தில் நீர்நிலை ஒன்றில் இருந்து, இலங்கைத் தமிழர் ஒருவர் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து
வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 50 வயதான தவசீலன் சபாநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் அரோ மாநிலத்தில் நீர்நிலை ஒன்றில் இருந்து, இலங்கைத் தமிழர் ஒருவர் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 50 வயதான தவசீலன் சபாநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 10ஆம் திகதி இவர் காணாமல் போயிருந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பின்னர் இவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த நபரின் மர்மமான உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரது மனைவி தற்போது யாழ்ப்பாணத்தில் வசித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.