புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

19 ஜூன், 2019

புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயத்திற்கு கனடாவில் வாழும் பழைய மாணவர்  எஸ் எம் மோகனபாலன் கணனிகளை  (Computers) அன்பளிப்பு   செய்துள்ளார் 
புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயத்திற்கு 10.06.2019 ந்திகதி 06 கணனிகள் (Hp Desktop PC: Intel core i5, 500GB Ram, 500GB Hard Drive, Windows 10) பாடசாலை அதிபர் திருமதி.சி.இராசரெத்தினம் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
மேற்படி கணனிகளை கமலாம்பிகை  ம  வி   பழைய மாணவரும், கனடா முன்னணி தொழிலதிபருமான திரு.மார்க்கண்டு மோகனபாலன் (உரிமையாளர்: TechSource Computer Liquidators) அவர்கள் அன்பளிப்பு செய்துள்ளார். அவருக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவிப்பதோடு, அன்னாரின் சமூகபற்றினையும், மண் சார்ந்த செயற்பாட்டினையும் பாராட்டி உள்ளார்கள் 
இக்கணனிகளை கனடாவில் Aero Courier எனும் பொதிகள் அனுப்பும் நிறுவனத்தை நடாத்தி வருபவரும், கமலாம்பிகை ம வி . பழைய மாணவருமான திரு.இராசமாணிக்கம் சத்தியகுமார் அவர்கள் அனுப்புகிற  செலவை  பொறுப்பெடுத்து இலவசமாக  உதவியுள்ளார். இருவருக்கும்  பாடசாலை சமூகம்  நன்றிகளை  தெரிவித்துள்ளது