புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

15 ஜூன், 2019

சிறீலங்கா அரசிடம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூட்டாக கோரிக்கை

இன வேறுபாடின்றி சகிப்பு மற்றும் சமமாக நடத்தலை பொதுவான சட்டத்தின் கீழ் அனைவருக்கும் சமமாக மேற்கொள்வதற்கான அர்ப்பணிப்பை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய சகல அரசியல் தலைவர்களும் மீள உறுதி செய்துகொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

ரணில் விக்கரமசிங்கவுடன் புதன்கிழமை அலரிமாளிகையில் நடைபெற்ற விசேட சந்திப்பின் பின்னர் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ரொமேனியா தூதரகங்கள் மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம், சுவிட்சர்லாந்து, நோர்வே தூதரகங்கள் (ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு) கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை நோக்கிய அரசியல் ரீதியான அழுத்தங்கள் தொடர்பில் நாம் அதிகளவு கவனம் செலுத்துவதுடன், இந்த நடவடிக்கைகள் சமாதானம் மற்றும் ஒருமைப்பாடு செயற்பாடுகளுக்கு தடங்கலாக அமைந்துள்ளதாகவும் கருதுகின்றோம்.

பிரதமருடன் இன்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். அச்சந்தர்ப்பத்தில் வெறுக்கத்தக்க பேச்சுக்களுக்கு எதிராகவும் மதங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை எற்படுத்தும் அமைப்பை நிறுவுவதிலும் அரசாங்கம் காண்பிக்கும் அர்ப்பணிப்பான செயற்பாடுகளை நாம் வரவேற்றோம்.

சகல சமூகங்களிடையேயும் சமாதானத்தை பேணி நிலைநிறுத்துவது தொடர்பில் அனைத்து இலங்கையர்களுடனும் நாம் பக்கபலமாக உள்ளதுடன், சமய தலைவர்கள் மற்றும் இதர சமூக தலைவர்கள் அவர்களை வழிநடத்தி வன்முறைகளுக்கு எதிராக குரலெழுப்ப வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.

அனைவருக்கும் பொதுவான சட்டத்தின் கீழ் நம்பிக்கை அல்லது இன வேறுபாடின்றி, பரஸ்பர மதிப்பு, சகிப்பு மற்றும் சமமாக நடத்தல் போன்றவற்றுக்கான நாட்டின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய சகல அரசியல் தலைவர்களையும் மீள உறுதி செய்யுமாறு நாம் கூட்டாக அறிக்கை விடுகின்றோம்.