புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

15 ஜூன், 2019

வாழ பணமில்லை! தாயும் 2 மகன்களும் தொடரூந்தில் பாய்ந்து தற்கொலை-தமிழ்ப் பெண்ணான ஜெனட் தர்ஷினி ;


கொழும்பில் கொள்ளுப்பிட்டி தொடரூந்து நிலையத்துக்கு அருகில் தொடரூந்து முன் பாய்ந்து தாயும், இரண்டு மகன்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான ஜெனட் தர்ஷினி இராமையா என்ற 32 வயதுப் பெண்ணும், அவரின் 11 வயது மற்றும் 12 வயது மகன்களுமே இதன்போது உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.தற்கொலை செய்ததாயின் கைப்பையைச் சோதனையிட்டபோது "வாழ்வதற்கு வழியில்லை; பணமில்லை. அதனால் தற்கொலை செய்துகொள்கின்றோம்" என்று எழுதப்பட்டிருந்த கடிதமொன்றை காவல் அதிகாரிகள் எடுத்துள்ளனர்