புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

15 ஜூன், 2019

முன்னணியுடன் மீண்டும் இணைந்து செயற்படுவோம்!- விக்கி நம்பிக்கை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

' திரும்பவும் அவர்களுடன் சேர்ந்து இணங்கிப் போவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது, எனவே, இதுபற்றி எதுவும் சொல்ல முடியவில்லை. எந்த இடத்திலும் எவரையும் நான் குற்றம் கூறுவதாக இல்லை.

முஸ்லிம் மக்களிடம் இருந்து நாம் கற்க வேண்டியது பல இருக்கின்றன. அதில் அவர்கள் அனைவரும் கூட்டாக விலகிய ஒற்றுமையும் ஒன்று, தங்களுக்குள் ஏராளமான பிரச்சினைகள் இருந்தாலும் தங்கள் சமூகத்தை பாதிக்கின்ற விடயம் வருகின்ற போது அவர்கள் ஒன்று சேர்வார்கள். இது இங்கு மட்டும் அல்ல, உலகம் முழுக்க காணகூடியதாக இருக்கிறது.

தமிழர்களிடையே வேறுவிதமான குணம் காணப்படுகிறது. நாங்கள் மட்டும்தான் விடயங்களை தெரிந்தவர்கள் என்ற வகையில் ஒவ்வொருவரும் நடக்க முற்படுவதனால்தான், எங்களிடையே ஒற்றுமை தடைப்பட்டு இருக்கிறது. எனவே முஸ்லிம்களின் இந்தச் சம்பவத்தை வைத்துக் கொண்டு தமிழர்கள் ஒரு பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும், என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.