ஜனநாயகக் கட்சியில் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளதாகக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த தாய்க்கும்-ஆப்பிரிக்க அமெரிக்க தந்தைக்கும் பிறந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் தேர்தலுக்கு தயாராகி வருகிறார்.
அதற்காக நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் சிறப்பாக பேசியதால் அவருக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும், முதலிடத்தில் உள்ள முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனுக்கு அடுத்தபடியாக கமலா ஹாரிஸ் 2-ம் இடத்துக்கு முன்னேறியிருப்பதாகவும் க்வின்னபியாக் தேசிய பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் நடந்த விவாதத்தின்போது வெறும் 7 சதவீதத்தைப் பெற்றிருந்த கமலா ஹாரிஸ் தற்போது 22 சதவீதத்துடன் 2-ம் இடத்தில் உள்ளார்.