3 ஜூலை, 2019

இரவில் பெண்களுக்கு தொல்லை கொடுத்தவர் மடக்கிப் பிடிப்பு!

வவுனியா, குடியிருப்பு பகுதியில் உள்ள பெண்களின் தங்ககம் ஒன்றிற்கு சென்று தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.வவுனியா, குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அரசாங்க வேலை செய்யும் பெண்கள் சிலர் வாடகைக்கு தங்கியுள்ளனர்.
சிலர் குறித்த வீட்டிற்கு இரவு வேளைகளில் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
வவுனியா, குடியிருப்பு பகுதியில் உள்ள பெண்களின் தங்ககம் ஒன்றிற்கு சென்று தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.வவுனியா, குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அரசாங்க வேலை செய்யும் பெண்கள் சிலர் வாடகைக்கு தங்கியுள்ளனர். சிலர் குறித்த வீட்டிற்கு இரவு வேளைகளில் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த வீட்டு உரிமையாளரான வயது முதிர்ந்த பெண் இதனை அப்பகுதி இளைஞர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். இளைஞர்கள் குறித்த நபர்களை மடக்கி பிடிக்க திட்டமிட்டு இருந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் நபர் ஒருவர் குறித்த வீட்டிற்கு தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து குறித்த நபர் இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, பொலிசாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து குறித்த நபரை இளைஞர்கள் ஒப்படைத்துள்ளனர். இதன்பின் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா பொலிசார் குறித்த நபரை எச்சரித்து நேற்ற பிணையில் செல்ல அனுமதித்தனர்.