புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

12 அக்., 2019

ஜனநாயக போராளிகள் -சஜித்திடம் எம்பி சீற்:பேரம் படியாமையால் கோத்தா?

சஜித்துடனான பேரம் படியாத நிலையில் ஜனநாயக போராளிகள் கோத்தா பக்கம் பாய்ந்துள்ளனர். முன்னாள் போராளிகளை சிறியளவில் உள்ளடக்கிய கட்சியின் உறுப்பினர்கள் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவையும்; மிக இரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இச்சந்திப்பு கடந்த வாரம் மிகவும் இரகசியமான இடமொன்றில் நடைபெற்றுள்ளது.


சனநாயக போராளிகள் கட்சியைச் சேர்ந்த துளசி, கதிர், வேந்தன் மற்றும் கவியரசன் ஆகியோர் உள்ளடங்கிய குழுவினரே இச் சந்திப்பை நடத்தியுள்ளனர்.
முன்னதாக ஜனநாயகப்போராளிகள் ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவளிப்பதெனில் தேசியப்பட்டியலில் தமக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றை தர கோரியிருந்தனர்.
எனினும் அதற்கு சஜித் தரப்பு பேரம் படியாத நிலையில் அவர்கள் கோத்தாவிடம் சரணடைந்துள்ளனர்.

முன்னதாக ஊடகவியலாளர் வித்தியாதரனின் அரசியல் நலனிற்காக ஜனநாயகப்போராளிகள் களமிறக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே