புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 அக்., 2019

வெளியாகியது தேர்தல் முடிவுகள்! பொதுஜன பெரமுன அபார வெற்றி

எல்பிட்டி பிரதேச சபை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 23,372 வாக்குகளை பெற்று முதலாவது இடத்தை பெற்றுள்ளது.

கட்சி வாக்குகளின் எண்ணிக்கை
ஆசனங்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 23,372 17
ஐக்கிய தேசியக் கட்சி 10,113 7
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 5,273 3
மக்கள் விடுதலை முன்னணி 2,435 2

ஐக்கிய தேசியக் கட்சி 10,113 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 5,273 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளது.

அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி 2,435 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளது.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 17 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு 7 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு 3 ஆசனங்களும், மக்கள் விடுதலை முன்னணிக்கு 2 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன

தேர்தலில் 53,384 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றனர். இதில் 75 வீதமான வாக்குகள், பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி. ஜே.வீ.பி மற்றும் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய அங்கீகரிக்கப்பட்ட 5 கட்சிகளை அங்கத்துவப்படுத்தி 155 வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தன

ad

ad