புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 அக்., 2019

நெல்சன் மண்டேலாவை வெல்ல வைத்தவர்கள் கோத்தாவுடன் பேசுவதா?கஜேந்திரன்

தேர்தல் பூகோளப் போட்டியைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் நலன்களின் அடிப்படையில், தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்க வேண்டுமென்பதே எங்கள் நிலைப்பாட்டுக் கோரிக்கை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

யாழ் கொக்குவில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில். கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார்.



இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தமிழ்த் தரப்பில் இருக்கக் கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது கோட்டாபய ராஜபக்சவுடன் பேச இருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. அதாவது கோட்டபாய தரப்பினர் கூட்டமைப்பை சந்திக்க கேட்டு இருந்ததாகவும் ஆனாலும் இனப்பிரச்சனை தீர்வு குறித்து மகிந்த ராஜபச்சவோடு பேசுமாறும் கூறியதாகவும் அதற்கான சந்திப்பை மேற்கொள்ள ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

கோட்டாபய ராஜபக்சவும் மஹிந்த ராஜபக்சவும் தமிழ் மக்கள் மீது இன அழிப்பை கட்டவிழ்த்து விட்டவர்கள் என்பதால் கடந்த 2015ஆம் ஆண்டு மஹிந்தவைத்; தோற்கடிப்பதற்காக மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, அல்லது மார்டின் லூதர் சிங் என்று சொல்லி மைத்திரிபால சிறிசேனவை வெல்ல வைக்கின்ற நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்இந்த இடத்தில் இருக்கின்ற கேள்வி என்னவென்றால் இனஅழிப்பை செய்தவர்கள் மஹிந்த மற்றும் கோட்டாபய என்று கூறியவர்கள் இப்போது கோட்டாயபாயவுடன் பேசுகின்றார்கள் என்றால் அதில் என்ன நியாயயம் இருக்க முடியும் என்பது தெரியவில்லை.

அவர்கள் இவரைக்கும் சொல்லி வருகின்ற அடிப்படையிலே இவர்கள் போர்க்குற்றவாளிகள் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும் இல்லை. இவர்கள் சர்வதேச குற்றவியியல் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பது தான் எங்களுடைய கருத்து. அதற்காக நாங்கள் தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டே வந்திருக்கிறோம்.

இந்த தேர்தலைப் பகிஸ்கரிக்க வேண்டுமென நாங்கள் தற்போது கூறுகின்றது கோட்டாபயவை வெல்ல வைப்பதற்கு என, சிலர் எம் மீது குற்றஞ்சாட்டுகின்றனர். தேர்தலைப் பகிஸ்கரிப்பதென்ற எங்கள் நிலைப்பாடுகள் நாங்கள் யாரையும் ஆதரிப்பதாக அல்ல. இத் தேர்தல் பூகோளப் போட்டியைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் நலன்களின் அடிப்படையில் தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்க வேண்டுமென்பதே எங்கள் நிலைப்பாட்டுக் கோரிக்கையாகும்’ என கூறினார்.

ad

ad