போர்ப்பதற்றம் - இலங்கைக்கு எச்சரிக்கைதொழில் செய்யும் இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டிய சூழ்நிலை
அமெரிக்கா - ஈரான் இடையில் ஏற்பட்டுள்ள போர்ப்பதற்றத்தினால், இலங்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், எரிபொருள் விலை பாரியளவில் அதிகரிக்க கூடும் எனவும் கூறப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் செய்யும் இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட கூடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் சுரங்க சில்வா குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான இலங்கையின் ஏற்றுமதிக்கும் பாதிப்பு ஏற்படக் கூடும். அமெரிக்க- ஈரான் நெருக்கடி நீண்ட காலம் நீடித்தால் இலங்கையின் சுற்றுலா துறைக்கு பாரிய அழுத்தம் ஏற்பட கூடும். ஏற்படவுள்ள ஆபத்து குறித்து இலங்கை முகங்கொடுப்பதற்கான மாற்றுவழிகளை இப்போதே கண்டுபிடிக்க வேண்டும் என பேராசிரியர் அறிவுறுத்தியுள்ளார்