புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

9 ஜன., 2020

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து யாழில் அச்சம்

எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், இன்றும் எரிபொருள் நிலையங்கள் அருகில் நீண்ட வரிசையைக் காண முடிந்தது.

ஈரானின் இராணுவத் தளபதியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலில் கொலை செய்த நிலையில் வளைகுடா நாடுகளில் போர்ச் சூழல் காணப்படுவதால் உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் தளம்பல் நிலை காணப்படுகிறது. எனினும் பெரியவில் விலை ஏற்றம் ஏற்படவில்லை.இந்த நிலையில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் யாழ்ப்பாணம் உள்பட நாட்டின் சில பகுதிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகளுக்கு பெற்றோல் நிரப்புவதைக் காண முடிகிறது.எனினும் நாட்டில் போதியளவில் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படுவதாகவும் பெற்றோலுக்கு தட்டுப்பாடு என வதந்தி பரப்பபட்டதால் மக்கள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்