புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

9 ஜன., 2020

ஜெனிவா பிரேரணை- திருத்தமின்றி நிராகரிப்பு

இலங்கையின் இணை அனுசரணையுடன் ஐ. நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கையின் இணை அனுசரணையுடன் ஐ. நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமெரிக்காவுடன் இணைந்து இலங்கை ஐ. நா. வில் சமர்ப்பித்துள்ள மேற்படி பிரேரணையில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துக்களை ஏற்க முடியாதெனக் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், திருத்தமின்றி அந்த பிரேரணையை முழுமையாக அரசாங்கம் நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்,

கடந்த அரசாங்கம் நீதித்துறையையும் பொலிஸ் துறையையும் எவ்வாறு நடத்தியுள்ளது. எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன என்பதைப் பார்க்கும் போது பெரும் கவலையாக உள்ளது. இதனால் நீதித்துறை பெரும் அபகீர்த்திக்கு உள்ளாகியுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மற்றுமொரு ஆணைக்குழுவை நியமிக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது. அதற்கான அவசியம் கிடையாது. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் பல விடயங்கள் வெளிவரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.