புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2020

ரஞ்சனிற்கு ஆப்பு:ரணில் உத்தரவு
ரணில் உள்ளிட்ட ஜதேக பிரபலங்களை சிக்கவைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஒழுக்கக் கோவையை மீறியுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய
தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

விசாரணைகளின் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.


இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய அலைபேசி கலந்துரையாடல்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அலைபேசி கலந்துரையாடல்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து அறிக்கை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

ad

ad