புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

25 ஜன., 2020

சுவிஸ் தூதரக பணியாளரின் தொலைபேசியில் இருந்து சிக்கிய புதிய தகவல்

சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டரின் தொலைபேசி உரையாடலில் இருந்து புதிய தகவல் வெளியாகியுள்ளதாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களம், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டரின் தொலைபேசி உரையாடலில் இருந்து புதிய தகவல் வெளியாகியுள்ளதாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களம், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடத்திச் செல்லப்பட்ட அந்த உத்தியோகத்தரின் வாயில் கைத்துப்பாக்கி ஒன்று வைக்கப்பட்டு மிரட்டியதன் ஊடாக அச்சமடைந்து, பேசமுடியாமல் இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரதன தகவல் வெளியிட்டிருந்தார். ஆனால் இந்த காலப்பகுதியில்தான் குறித்த ஊழியர் பலருடனும் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டதாக குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த உரையாடல் தொடர்பான ஆதாரங்களையே நீதிமன்றத்தில் அவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.