புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

25 ஜன., 2020

கூட்டமைப்பின்  முதன்மை   வேட்பாளர் தகுதி கே, வி ,தவராசா  அவர்களுக்கு  உரித்தானது
தமிழ் தேசிய கூட்டமைப்பு  கொழும்பு உட்பட மேளமாகாணத்திலும்  வேட்பாளர்களை களமிறக்கும் முயட்சியில் ஈடுபட்டுள்ளது .  இதுவரை மானசீகமாக மனோ கணேசனுக்கு  கொடுத்து வந்த ஆதரவினை விளக்கி இந்த நிலையை எடுத்துள்ளது கூட்ட்டமைப்பு இது  நடக்குமானால் மேல்மாகாண கொழும்பு மாவட்த்தில் முதலாண்மை வேட்ப்பாளராக பிரபல  ஜனாதிபதி  சடடதரணியும்   கொழும்பு மாவடட தமிழரசு கட்சி தலைவருமான  கே வி தவராசா  அவர்களே  மிகவும் பொருத்தமானவர் .கொழும்பில்  பல்வேறு காலங்களிலும்  நிர்வாக  முன்னெடுப்புகளில் பெரும் பங்காற்றிவரும் கே வி தவராசா புங்குடுதீவை சேர்ந்தவர் .இயல்பாகவே  அமைதியான  குணாதிசயங்கள் கொண்ட  இவர்  பெரும் விளம்பர  புகழ் பரப்பும் தன்மையற்ற  சாதாரண  வாழ்க்கை  வாழும்  பெருந்தகை .பல்வேறு கட்டங்களிலும் அரசியல் கைதிகளின் சடட நடவடிக்கைகளில் கைகொடுத் துதவி   நின்றவர் .  எல்லாவற்றையும் விட  புங்குடுதீவு உட்படட  தீவக  மக்கள்  வர்த்தகர்களாக  கோலோச்சி வாழும்  கொழும்பு பிரதேசத்தில் இயல்பாகவே  ஆதரவுக்கரங்கள்  நீடும்  வாய்ப்பு  அதிகமுள்ளது எனவே  எந்தவித  பாகுபாடுமின்றி  இவரை  வேட்ப்பாளராக  நிறுத்தும் முனைப்புக்கு  தமிழ் மக்கள்  கை  கொடுக்க வேண்டும் முக்கியமாக புலம்பெயர் அமைப்புக்கள் இந்த விடயத்தில் முன்னின்று சம்பந்தப்படடவர்களை அழுத்தம் கொடுத்து ஆலோசித்திட  வைக்க வேண்டும் இவரது பாராளுமன்ற  பிரவேசம் தமிழ் மக்களுக்கும்   தீவகத்துக்கும் பெருமை சேர்ப்பதோடு மட்டுமன்றி   பல நன்மைகளையும் பயக்கும்